சா/த பரீட்சையில் ஆள்மாறாட்டம்: ஒருவர் கைது


க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் மோசடி செய்த ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
நேற்றுக்காலை 9.15 மணியளவில் பரீட்சைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி மேற்படி பரீட்சை மண்டபத்தில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் செய்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நபர் நேற்றுக்காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர் உடனடியாக குட்டிகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த பரீட்சாத்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவருக்கெதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சில வேளைகளில் குறித்த பரீட்சார்த்திக்கு ஆயுள் முழுவதும் எதுவித பரீட்சைக்கும் தோற்றமுடியாதவாறு தடைசெய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரீட்சை மோசடிகள் இடம்பெறும் இடங்களிலிருந்து நேரடியாக பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு எந்நேரமும் அறியத்தர முடியும் என்றும் பரீட்சை ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார். 

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.