கைதான பல்கலை. மாணவர்களை விடுதலை செய்! வவுனியா ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கோசம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த போராட்டத்தில் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்கி ஆனந்தன் ஆகியோரும்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரும்,
புளொட் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக பாஸ்கரா, புதிய மாக்ஸிச லெனினிய கட்சியின் செந்திவேல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்
“கைதான பல்கலை. மாணவர்களை உடனே விடுதலை செய்”,
“நிலத்தை ஆக்கிரமிக்காதே”,
“மத முரண்பாட்டை தோற்றுவிக்காதே”
என்று அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு பெருந்திரளான மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.