விவசாயிகளுக்கு மீளவும் விதை நெல் வழங்குவதற்கு கமநல திணைக்களம் நடவடிக்கை
வவுனியாவில் அதிக மழை காரணமாக இடிந்த குளங்கள் மற்றும் வெள்ளத்தினால் அழிந்து போயுள்ள நெல்வயல்களை கமநல மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர் எஸ்.எம் .சந்திரசேன இன்று நேரடியாக பார்வையிட்டார்.
அதன்படி வவுனியா நகர சபைக்குட்பட்ட பரவங்குளம், பிரணங்குளம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.
வவுனியாவில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 50ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் சேதமடைந்து உள்ளன.
இதனால் நெல் வயல்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கம நல திணைக்களத்தினால் மானிய முறையில் வழங்கப்பட்ட நெல் மற்றும் உரவகைகளை மீளவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.
அத்துடன் மழையினால் இதுரை 50 குளங்கள் இடிந்து சேதமாகியுள்ளன. இதனால் பாதிப்புக்கள் அதிகளவாக இருப்பதனால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாது தடுக்கும் முகமான 100 குளங்களை புனரமைப்பதற்கும் நிதியுதவியினை வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.