வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை ரத்து ; அரச அதிபர்
வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இது வரை இடம் பெயர்ந்துள்ளனர்.
எனவே இவர்களுக்கான அனர்த்த நிவாரண வேலைகளை முன் எடுப்பதற்காக இன்று முதல் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான விடு முறைகள் ரத்தாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளைய தினம் வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறையான நத்தார் தின விடுமுறையும் வவுனியா உத்தியோகத்தர்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஏனைய உத்தியோகத்தர்கள் சமுகம் தரவேண்டும் எனவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்கும் முகமான இலங்கை அரசினால் வவுனியா மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.