வெள்ளத்தால் வவுனியா மாவட்டத்தில் 6092 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.
வெள்ளப்பெருக்குக் காரணமாக வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து 10 லொறிகளில் உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலதிகமாக அனுராதபுரத்திலிருந்து இரண்டு லொறிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்ப்பாசனக் குளங்களைக் கண்காணிப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார் மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1536 குடும்பங்களைச் சேர்ந்த 5,090 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6092 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 700 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் அனைத்துக் குளங்களும் நிரம்பியி ருப்பதுடன் பல குளங்கள் வான்பாய்ந்து வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் 34 கன அடிக்கு மேல் நீர் நிரம்பியிருப்பதுடன் வான்பாய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட் டிருப்பதாகவும் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு குளங்கள் நிரம்பி வான்பாய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், பாண்டியனாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களுக்கான தரைவழி போக்குவரத்து தொடர்புகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நகருக்குச் செல்வதற்கான மூன்றாம் கட்டையடிப் பிரதேசத்தின் பாலம் வெள்ளத்தில் மூழ்கியமையால் முல்லைத்தீவு நகருக்குச் செல்வதற்காக 6 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப் பட்டது.
வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார் மாவட்டமே அதிகமாகக் பாதிக்கப்பட்டுள்ளது.
முசலி மற்றும் நாணாட்டான் ஆகிய பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம்பாய்வதால் சாதாரண வாகனங் களில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், உழவு இயந்திரங்கள் மூலமே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் குறிப் பிட்டார்.
வெள்ளநிலைமையைக் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு உதவுவதற்காக யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்ப தாகவும், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் மற்றுமொரு குழு மன்னாருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக வும் அவர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலையைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலையை பிரகடனப்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக்கூட்ட மைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துச் செல்வதால் நான்கு வான் கதவுகளும் நான்கு அடிக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர கேட்டுக்கொண்டுள்ளார். வெள்ளம் காரணமாக வவுனியா பாவற்குளத்தில் 27 கன ஏக்கருக்கு நீர் நிரம்பியுள்ளது.
ஆரம்பத்தில் நான்கு வான் கதவுகளும் ஆறு அங்குலங்களே திறந்து விடப்பட் டிருந்த நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வான்கதவுகள் நான்கும் நான்கு அடிக்குத் திறந்துவிடப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். குளத்தின் அணைக்கட்டுக்களில் பத் தொன்பதரையடி உயரத்துக்கு நீர் தேங்கி யுள்ளது. திறந்துவிடப்பட்ட நீரினால் வவுனியா செட்டிக்குளம் வீதி மூடப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.