டிசம்பர் 13, 14 இல் நடக்கப்போகும் விபரீதம்
டிசம்பர் 13-14 ஆம் திகதிகளில் வானியலில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று நிகழவிருப்பதாக அறியப்பட்டுள்ளது, rock comet. எனும் வால் நட்சத்திரங்களின் துகள்கள் வந்து விழக் கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன, இவை5.10 km விட்டத்தைக் கொண்டிருப்பதுடன் 1983ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி கண்டறியப்பட்டன.
இவற்றை விண்வெளிக் குப்பைகள் என்றும் சொல்வார்கள். 2009ம் ஆண்டு நாசாவின் விண்கலமான STEREO-A இந்துபோன்ற 3200 இற்கும் மேற்பட்ட துகள்களை அவதானித் திருந்தது, மிகவும் பிரகாசமாக வந்து விழும் இத்துகள்கள் காற்று மண்டலத்திற்குள் நுழையும் போது உராய்வு காரணமாக எரிந்து பெருமளவு சாம்பலாகி விடும், மிகச் சிறியளவு துணிக்கைகளே பூமியை வந்தடையும், இதன் மூலம் பரந்தளவிலான பாதிப்பு ஏற்படாதெனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.