சேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம் வேறுபடுத்த ஏற்பாடு

news
நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேரூந்துகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு அதன் மூலம் வேறுபடுத்திக் காட்டுவதற்கான ஏற்பாடுகளும் எடுக்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இன்றைய தினம் மைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. இதன் போது போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.

இதன்படி தனியார் போக்குவரத்து பேரூந்துகள் இளம் நீல நிற வர்ணத்தையும்,  இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சிவப்பு நிற வர்ணத்தையும் கொண்ட பேரூந்துகளே எதிர்காலத்தில் சேவையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மற்றும் வான்கள் மஞ்சள் வர்ண பூச்சை பூச வேண்டும்.

இதேவேளை மக்கள் போக்குவரத்திற்காக இலங்கையில் 20 ஆயிரம் பஸ்கள் பதியப்பட்டுள்ளதுடன் பல்வேறுபட்ட போக்குவரத்து தேவைகளிற்காக 4.5 மில்லியன் வாகனங்களும் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.