உணவுப் பொதியில் விச ஜந்து: வவுனியா உணவகத்தில் கண்டுபிடிப்பு


வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலிருந்து நபரொருவரால் வாங்கிச் செல்லப்பட்ட உணவுப் பொதியில் விச ஜந்து அவிந்த நிலையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“அரணா“ என்ற விச ஜந்து குறித்த உணவுப் பொதியில் அவிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உணவை உண்ட நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொத சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட அவர் குறித்த உணவகம் சுத்தமான முறையில் இல்லை எனவும் சமயலுக்கு உதவான பொருட்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வர்த்தகரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிடப்பட்டுள்ளதாக வவுனியா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.