39 பேருக்கு புனர்வாழ்வளித்து விடுதலை : பெயர் விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது


பெண்கள் இருவர் உட்பட 39 பேரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெவ்வேறு காரணங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டிருந்த ஒரு தொகுதி வழக்குகளின் 41 வழக்குகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
39 வழக்குகளின் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 39 பேருக்கு ஒரு வருடம் குறுகிய கால சிறைத்தண்டனையின் பின், ஒரு வருடம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி உத்தரவிட்டுள்லார்.
பெண்கள் இருவரும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கும், ஆண்கள் முப்பத்தேழ்வரும் மருதமடு புனர்வாழ்வு நிலையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பெண் கைதியான ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டைச் சேர்ந்த ரெங்கசாமி பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் கிளிஸ்தோகுளம் 7ம் யுனிற்றைச் சேர்ந்த  லக்ஸ்மன் விக்கினேஸ்வரனுக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
கலைவிழி என்றழைக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த வேலாயுதம் கவிதா என்பவரை மூன்று மாதம் சாதாரண சிறைத் தண்டனைக்கு பின் புனர்வாழ்வுக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த வசந்தகுமாரன் குகராணி என்பவரை ஒரு வார சிறைத் தண்டனைக்கு பின் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண் கைதிகளான 37 பேரில் மன்னார் அடம்பன் காத்தான்குளத்தைச் சேர்ந்த அருள்நாயகம் பெனிற்றோ, மட்டு/வாழைச்சேனையைச் சேர்ந்த அருணாசலம் இலங்கேஸ்வரன் ஆகிய இருவரையும் ஒரு வருட புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்குமாறும்,
ஏனைய 35 ஆண் கைதிகளான
மேனன் என்றழைக்கப்படும் தேவதாசன்(பருத்தித்துறை தும்பளை)
அசோகராசா நிக்சன்குமார்(காங்கேசன்துறை)
துரைராசா வசந்தன்(திருமலை கிண்ணியா அலெக்ஸ் தோட்டம்)
கணபதி லோகேஸ்வரன்(கிளி/கோணாவில்)
சின்னவன் என்றழைக்கப்படும் ஆறுமுகம் மாடாசாமி (செட்டிக்குளம் நேரியகுளம்)
சிவபாலசுந்தரன் ஹரிகரன்(நெடுங்கேணி)
முருகமூர்த்தி கஜன் (கிளி/திருவையாறு)
புவியரசன் என்றழைக்கப்படும் அப்பாத்துரை கணேஸ்வரன்(யாழ். கோண்டாவில்)
குட்டி என்றழைக்கப்படும் யோகராசா சுரேந்திரன் (கொடிகாமம்)
பத்மநாதன் சுரேஸ்குமார் (கிளி/ ஸ்கந்தபுரம்)
முகுந்தன் என்றழைக்கப்படும் செல்லத்துரை சுதாகரன் (ஒட்டுசுட்டான்)
பொன்னம்பலம் குகானந்தராசா (புளியங்குளம்)
இராசதுரை ஜெயராசா (யாழ் வசாவிளான் மேற்கு)
கணேஸ் அம்பிகைபாகன் (கிளி/உதயநகர்)
இனியவன் என்றழைக்கப்படும் குணசேகரன் வினோத் கண்ணன் (மயிலிட்டி)
தர்மராசா உதயகுமார் (கிளி/உதயநகர் மேற்கு)
பொபி என்றழைக்கப்படும் தாசன் ஜெயதாசன் (வவு/கணேசபுரம்)
கரன் என்றழைக்கப்படும் மோகன் மதன் (யாழ்.சுன்னாகம்)
பழனிவேலன் செந்தூர்வாசன் (யாழ்.தெல்லிப்பளை)
தேசிங்கன் என்றழைக்கப்படும் நாகேஸ்வரன் நதீஸ்வரன் (கிளி/கனகராயன்குளம்)
விஸ்வநாதன் சுரேஸ் (கிளி/வட்டக்கச்சி)
ஜேசுதாசன் ஜெயதீபன் (திருமலை அன்புவழிபுரம்)
எழிலன் என்றழைக்கப்படும் திருஞானசம்பந்தன் பார்த்திபன் (கிளி/இராமநாதபுரம்)
தமிழரசன் என்றழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை அகிலதாஸன் (புங்குடுதீவு)
நவரத்தினம் குமாரகன் (கொடிகாமம்)
பார்த்திபன் என்றழைக்கப்படும் இராமசாமி திருமுருகன் (கிளி/வட்டக்கச்சி)
மதியரசன் என்றழைக்கப்படும் பத்மநாதன் யசிகரன் (கோணாவில் யூனியன்குளம்)
இருதயதாசன் கெனடி (முல்லை/புதுக்குடியிருப்பு)
நிரோஷன் என்றழைக்கப்படும் மகேஸ்வரன் விஜயசெந்தூரன் (கிளி/விசுவமடு)
பிரான்ஸிஸ் சகாயநாதன் (முல்லை/4ம் வாய்க்கால்)
கதிரவேல் எழில்தரன் (கிளி/விஸ்வமடு)
ஜோதிலிங்கம் புஸ்பராசா (முல்லை / ஸ்கந்தபுரம்)
பழனிச்சாமி பிரதீபன் (கிளி/பாரதிபுரம்)
அனிபாலன் என்றழைக்கப்படும் பழனியாண்டி செல்வகுமார் (நிலாமோட்டை)
சிவசிதம்பரம் நிரஞ்சன் (காரைநகர்)

ஆகியோருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதித்து, அதன்பின் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிக்காக மருதமடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.