வவுனியா இராணுவ முகாமிலிருந்து 11 இராணுவத்தினர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி!
யாழ். குடாநாட்டில் வேகமாகப்பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு 11 இராணுவத்தினர் 13 பேர் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா இராணுவ முகாமிலிருந்து வருகை தந்த இராணுவத்தினர் சிலருக்கே டெங்கு காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
இதேவேளை டெங்குக் காய்ச்சலால் கடந்தவாரம் 41 பேர் பீடிக்கப்பட்டுள்ளனதாக தெரிவித்த வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் இந்த மாதம் இதுவரை டெங்கினால் 97 பேர் பீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
டெங்குக் காய்ச்சலுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், டெங்கில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சுற்றாடல்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நுளம்புத் தாக்கத்திலிருந்து விலகி இருக்குமாறும் யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மேலும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.