செட்டிகுளம் வைத்தியசாலையில் செவிலியர் ஒருவர் மீது சிங்கள வைத்தியர் தாக்குதல்!
வவுனியா, செட்டிகுளம் வைத்தியசாலையில் செவிலியர் ஒருவர் அவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரால் கைகளாலும் கால்களினாலும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்
நேற்று நடைபெற்ற இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நோயாளி ஒருவருக்கு குறித்த வைத்தியர் செவிலியரை ஊசி மருந்து ஏற்றுமாறு கேட்டுள்ளார்.
அதன் பிரகாரம் அவரும் அதற்கான முன் வேலைகளை செய்துகொண்டு இருந்த வேளை சம்பந்தப்பட்ட வைத்தியருக்கும் செவிலியருக்கும் இடையில் இருந்த முன் பகை காரணமாக நோயாளர்களின் முன்னால் கடுமையாக தாக்கியுள்ளார்.
வைத்தியர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். செவிலியர் மட்டக்களப்பை சேர்ந்தவர்.
இது தொடர்பில் வைத்திய அத்தியட்சகருக்கு முறையிட்ட போதும் அவரும் வைத்தியருக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது என்று கூறி பிரச்சனைப்படுத்த வேண்டாம் என்று செவிலியரிடம் கூறியுள்ளார்.
இத்தகவிலை இவ் வைத்தியசாலையில் கடமைபுரியும் ஊழியர் ஒருவர் எமது தளத்திற்கு தெரிவித்துள்ளார்.