வவுனியா பஸ் டிப்போ வளவுக்குள் பள்ளிவாசல் அமைக்க அனுமதி வழங்காததினால் முகாமையாளர் இடமாற்றம்


வவுனியாவிலுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர், தனது அலுவலகம் அமைந்துள்ள காணிக்குள் பள்ளிவாசல் ஒன்றினை அமைப்பதற்கு அனுமதிக்காமை காணரமாக அவர் உடனடியாக யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கையில்,
வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபையின் டிப்போ அமைந்துள்ள காணிக்குள் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்காகச் சிலரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அங்கு கடமை புரியும் ஊழியர்களில் ஒரு பிரிவினர் இதனை விரும்பவில்லை.
பின்னர் முகாமையாளர் அலுவலகம் அமைந்துள்ள காணிக்குள் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு அவரிடம் அனுமதி கேட்கப்பட்டது.
இருப்பினும் அதற்கான அனுமதியை வழங்க அவர் மறுத்தமை காரணமாகவே அவரைப் பழிவாங்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
இவ்வாறு அரச ஆதரவு பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.