அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோத படகில் சென்ற 67 பேர் கடற்படையினரால் கைது!


அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்ட மேலும் ஒரு தொகுதியினரை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
சிலாபம் பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கடலில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 45 தமிழர்களும் 22 சிங்களவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவர்களில் 7 பெண்களும் 6 சிறார்களும் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணைகள் மூலம் இவர்கள், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, இங்கிரிய மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முகத்துவாரம் மீன்பிடி இறங்குதுறைக்கு கொண்டு வரப்பட்டு, இரகசிய பொலிஸாரிடம்; மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.