வவுனியா சிறைக் கைதிகளின் செயற்பாடானது சர்வதேசத்திற்கு செய்தியை வழங்கும் செயற்பாடு

வவுனியா சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் சிலரினால், சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டமை சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை வழங்கும் செயற்பாடாக இருப்பதாக சிறைச்சாலைகள் அமைச்சர் கூறுகிறார்.

இதனை சர்வதேச தரப்பினர் உணர்ந்து கொள்ளவேண்டும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

வவுனியா சிறைக்கைதிகள் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைய வேண்டிய தருணத்தில் இவ்வாறான பாரிய பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை சிலர் அரசியல் கைதிகள் என்று கூறினாலும், சர்வதேசத்திற்கும், உள்நாட்டில் அவர்களுக்கு சார்பான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் ஒரு செய்தியை கைதிகள் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தற்போது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார்

இந்தநிலையில், வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற  அசம்பாவிதங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய செயல்பாட்டாளர்களினதும்அவசர சந்திப்பு ஒன்று எதிர்வரும் 4 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

By;-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.