கைதிகள் அநுராதப்புரத்திற்கு மாற்றம்

கடந்த இரண்டு தினங்களாக வவுனியா சிறைச்சாலையின் அரசியல் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டிரு மூன்று காவலர்களும், காவல்துறை விசேட படைபிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
 இதனை பதில் காவல்துறை ஊடக பேச்சாளர் சஜீவ மெதவத்த எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
 காவல்துறை விசேட படைபிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் மூவரும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்;டுள்ளார்.
 இந்தநிலையில் அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்று கோரி, கடந்த சில தினங்களாக உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வந்த அரசியல் கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை பணய கைதிகளாக சிறைப்பிடித்தனர்.
 இந்த நிலையிலேயே, காவல்துறையின் விசேட படைப்பிரிவினரால் குறித்த அதிகாரிகள் மூவரும் மீட்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, குறித்த அரசியல் கைதிகள் அனைவரும் அநுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
 இதேவேளை, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள், இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 இதனிடையே, மூன்று சிறைச்சாலை காவலர்களும் ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும், வவுனியா பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 சிறைக் கைதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலை காரணமாக காயமடைந்தவர்களே இவ்வாறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
By:-yasikanth

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.