சிறைக்கைதிகள் போராட்டம்
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி இயக்க சந்தேக நபர்கள், இன்று காலை முதல் உணவு பானங்களை ஏற்க மருத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை உதவி பேச்சாளர் சஜீவ மெதிவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், அங்கிருந்து வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர், அங்கு இயல்பற்ற சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்ததாக கூறப்படும் அவரை, பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்குமாறுஅண்மையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அவர் சிறைச்சாலையில் இருந்து அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் ஏனைய கைதிகள் மத்தியில் இயல்பற்ற சூழ்நிலை தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழீழ விடுதலைப்புலி சந்தேநபர்கள் தங்கியுள்ள சிறைச்சாலையினுள் யாருக்கு பிரவேசிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்காக காவற்துறையினரின் உதவியை இன்னும் நாடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
By:-yasi