வவுனியாவிற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன விஜயம்
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீன் விடுத்த அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டிருந்தார்.
மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் காலை இடம் பெற்ற கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அமைச்சர் தினேஷ், மன்னாரில் தற்போது இடம் பெறும் நீர்வழங்களின் விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
மன்னாரில் பிரசித்தி பெற்ற தீருகேதீஸ்வரம் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகைத் தருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு, அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர், இது குறித்து நடவடிக்கையெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அதனையடுத்து, 1968 ஆம் ஆண்டு பேசாலையில் டின் மீன் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்காக அன்றைய கைத்தொழில், கடற்றொழில் அமைச்சராக இருந்த டீ.ஆர்.பி.குணவர்தனவினால் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட் தொழிற்சாலையினையும் அமைச்சர்கள் பார்வையிட்டதுன் தற்போது மன்னார் நகருக்கு நீர் விநியோகம் செய்யப்படும் எழுத்துர், தோட்டக்காடு நீர் வழங்கள் பகுதிக்கு விஜயம் செய்து அதனையும் பார்வையிட்டனர்.
இதே வேளை, வங்காலை சான்த ஆனா மத்திய கல்லுரியில் நிர்மாணிக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கல் திட்டத்தையும் அமைச்சர்கள் ஆரம்பித்து வைத்தனர்.
குறிப்பாக வவுனியா பிரதேசத்தில் குடிநீரின் தன்மை குறித்தும் கருத்துப் பறிமாறப்பட்டதுடன், வவுனியா தெற்கு பிரதேச சபை பிரிவில் தண்ணீரின் தன்மை மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுவதால் பலர் சிறுநீரக வியாதிகளுக்கு உட்பட்டுள்ளதாகவும், இது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர றிசாத் பதியுதீன், அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உட்பட திணைக்களத் தலைவர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
By:-yasikanth