தனியாருக்குச் சொந்தமான காணியில் சிங்களவர் ஒருவரின் சடலம் திடீர் தகனம்: வவுனியாவில் பரபரப்பு
வவுனியாவில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை அனுமதி ஏதுவுமின்றி, தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் திடீரெனத் தகனம் செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தச்சன்குளம் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்துக்கு அருகிலேயே விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாகவே வவுனியா நகரசபையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற நகரசபைத் தலைவர் ஐ.கனகையா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இந்தப் பகுதியில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றமை கண்டிக்கத்தக்கது என்றும் இது தொடர்பாகப் பொலிஸாருக்கும் வவுனியா அரச அதிபருக்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.
By:-yasikanth