வவுனியாவில் 1981 ஆம் ஆண்டின் பின்னர் சிங்களவர் அரச அதிபராக கடமையேற்பு

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய திருமதி சார்ள்ஸ், மட்டக்களப்பிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதனை தொடர்ந்து, காலி மாவட்டத்தில் மேலதிக அரச அதிபராக கடமையாற்றிய பண்டார கேமச்சந்திர, வவுனியா அரச அதிபராக இன்று பௌத்த மதகுருமாரின் ஆசியுடன் கடமையை பொறுப்பேற்றுள்ளார்

1977ஆ ம் ஆண்டு தொடக்கம் 1981 ம் ஆண்டு வரை இறுதியாக முதன்னநாயக்க என்ற சிங்களவர், வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய பின்னர், தற்போது மீண்டும் சிங்கள நிர்வாக அதிகாரியொருவர் வவுனியாவில் அரச அதிபராக கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கத விடயம்.

இன்று காலை 10.00 மணிக்கு கோப்புகளில் ஒப்பமிட்டு கடமையை பொறுப்பேற்ற பின்னர், நான் வவுனியா அரசாங்க அதிபர் என்று மாத்திரம் தமிழில் புதிய அரச அதிபர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பண்டார கேமச்சந்திர கடமையை பொறுப்பேற்ற போது, ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதிகளும் வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

தமிழ் மொழி பேச முடியாத ஒரு அரச அதிபரால் எவ்வாறு சாதாரண மக்களுடன் உரையாட முடியுமென பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். சிங்கள அரசு திட்டமிட்ட வகையிலேயே வடக்கிலே சிங்கள நிர்வாக அதிகாரிகளை நியமிக்கின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தமிழர்களின் எதிர்ப்பின் மத்தியில் மன்னாரில் சிங்களவர் அரச அதிபராக கடமையாற்றும் அதே வேளை சிங்கள குடியேற்றங்களை நிறுவியும் வருகிறார்.

எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்து முல்லைத்தீவ மாவட்டத்திற்கு சிங்கள அரச அதிபரை நியமிக்க அரச நடவடிக்கையில் இறங்கலாமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.