முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து வவுனியாவில் அஞ்சலி நிகழ்

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக அவர்களது உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நினைவு தினத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை பலிகொடுத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்த மக்களுக்கான மௌன பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் அவர்கள் நினைவாக மலர் அஞ்சலியினையும் செலுத்தினர்.

By:-yasikanth


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.