'தேசத்தின் மகுடம்' கண்காட்சி நிகழ்வில் விடுதலையாகும் முன்னாள் போராளிகள்

அநுராதபுரம் ஓயாமடு பிரதேசத்தில் 600 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள "தேசத்துக்கு மகுடம்" 2012 கண்காட்சியை மஹிந்த ராஜபக்‌ஷவினால் சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு முகாம்களிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு தொகுதியினரை 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியில் வைத்து விடுதலை செய்யவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வில் வைத்து எதிர்வரும் 8ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 42 பேரை விடுவிக்கவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். 

கொழும்பு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போரளிகள் இதுவரை விடுவிக்கப்பட்டதாகவும், இம்முறை மாறுதலாக கண்காட்சியில் வைத்து தெரிவு செய்யப்பட்ட 42 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் 600 பேர் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியை பார்வையிடுவதற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நடைபெறும்.  இக்கண்காட்சியை முன்னிட்டு பாதுகாப்புக் கடமைகளுக்காக 5 ஆயிரம் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முப்படையினரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவர்.

BY:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.