மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் வவுனியாவில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் யுனைஸ்பாரூக் தலைமையில் நேற்று இடம்பெற்ற இக்கூட்டத்தில்,
வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் வவுனியா வடக்கு பிரதேசபை தவிசாளர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர்கள் பூபாலசிங்கம், குகராஜா, வடமாகாண ஆளுநரின் இணைப்பாளர், அமைச்சர் றிசாத்தின் இணைப்பாளர் உள்ளிட்டோரும், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்,
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் கிராம அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
நிவாரண உதவிகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், காணிப்பதிவு விடயத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் இதற்கு கிராம அலுவலர்கள் உட்பட சில அதிகாரிகள் துணைபோவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கனகராயன்குளம் கமநல அபிவிருத்தி நிலையம், மற்றும் பாடசாலை காணிகளில் பொலிசார் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் பொது நிகழ்வுகளை நடத்தமுடியாதுள்ளதாகத் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
நெடுங்கேணியிலிருந்து ஒலுமடு செல்லும் பாதையின் நுழைவுவாயிலில் உள்ள இராணுவத்தினரின் காவலரணும் அதனொடு ஒட்டியுள்ள இராணுவத்தினரின் தேநீர்கடையும் வீதியகற்றும் பணிக்கு இடையூறாக இருப்பதாக விதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதன் போது தெரிவித்தனர்.
மணல் அகழ்வு மற்றும் மரம் வெட்டுதல் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டன. இதனால் தற்பொழுது வீட்டுத் திருத்தப்பணிகள் மற்றும் புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகையில் மக்கள் போதிய மணல் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் இப்பகுதிக்குச் சம்பந்தமற்றவர்கள் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதே நேரம், பாதுகாப்பு, சனத்தொகை மற்றும் உலர் உணவு வழங்கல், வீட்டுத்திட்டம், நீர்வழங்கல் மற்றும் சுகாதாரம் காணி, விவசாயம், குளங்கள் புனரமைப்பு, வீதி, மின்சாரம், கல்வி, மருத்துவம், கால்நடை உற்பத்தி, தபால் சேவைகள், பிரதேசசபையின் செயற்பாடு, பல்நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடு, கட்டுமானப்பணிகளின்மீதான சிறப்புப்பார்வை, விளையாட்டு, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
By:-yasi