கனடிய பா.உறுப்பினர் குழு இலங்கை விஜயம் உத்தியோகபூர்வமானது அல்ல!
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஜயம் உத்தியோகபூர்வமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான பெண் ஒருவரால் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் கனடிய நாடாளுமன்ற குழுவினர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சிறந்த முன்னெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பரிந்துரைகள் நல்லிணக்கதை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடிய கொன்சவேட்டிவ் கட்சியை சேர்ந்த Don Valley, மற்றும் Joe Daniel ஆகியோரை இந்தக்கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
பல இனங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் இந்தப் பரிந்துரைகள் உதவும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக்குழுவினர் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
இதன்போது இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.