வவுனியா வீதிகளில் வியாபாரம் செய்வோருக்கு நிரந்தரமான இடத்தினை தரவேண்டும்..!
வவுனியா நகர சபைக்குட்பட்ட வீதிகளில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு வீதிகளில் வியாபாரம் செய்வதற்கு நகரசபை அனுமதி வழங்காது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தாம் வியாபாரம் செய்ய சிறந்த இடத்தை வர்த்தக சங்கமும் நகரசபையும் இணைந்து ஏற்படுத்தி தரவேண்டுமென் அங்காடி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது….
“வவுனியா ஹொரப்பத்தான வீதியில் 13 வருடங்களாக நகரசபைக்கு வரி செலுத்தி தற்காலிக கடை அமைத்து 43 பேர் வியாபாரம் செய்து வந்தோம். அன்றிருந்த நகரசபை செயலாளர் வீதியை அகலமாக்க வேண்டியுள்ளதால “நீங்கள் உங்கள் கடையை அகற்றிவிடுங்கள் வேறு ஓர் இடத்தில் கட்டித்தருகின்றோம்” என்று கூறி 3 வருடங்கள் கடந்து விட்டது.
எனினும் அதற்கு இன்றும் முடிவில்லை. தற்போதுள்ளள நகரசபை தலைவர் எங்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றார்..?
இந்த 43 பேருடைய பிரச்சினை வர்த்தகர் சங்கத்திற்கும் வவுனியா அரசாங்க அதிபருக்கும் தெரியும். எனவே எமக்கு சிறந்த நிரந்தரமான இடம் பெற்றுத்தரவேண்டும்.