முல்லைத்தீவு மக்களுக்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு மாற்றம்

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு என வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் வெலி ஓயாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் பத்து உழவு இயந்திரங்கள் இவ்வாறு எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதற்கான உத்தரவை முல்லை மாவட்ட கமநல சேவைப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாகவும் குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவால் வழங்கப்பட்ட இந்த உழவு இயந்திரங்கள் வெலிஓயா பிரதேச செயலக பிரிவு சம்பத்த நுவரவுக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெலியோவில் உள்ள சிங்கள பிரதேச சபையில் அடங்கும் விவசாய திணைக்களங்களின் வாயிலாக அங்குள்ள மக்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும் அதற்கான அரசாங்க அனுமதிக் கடிதம் ஒரு சில நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைப் போலவே வவுனியாவில் ஒரு சம்பவம் நடந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட உழவு இயந்திரங்களை நாமல் ராஜபக்ஷ தலைமையில் சிங்களவர்களுக்கு வழங்கியதைப் பார்த்து வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் கண்கலங்கி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.