வவுனியா நகரசபை தலைவரை பதவி விலகுமாறு எச்சரிக்கை கடிதம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு

வவுனியா நகரசபை தலைவரை 48 மணித்தியாலத்தில் பதவி விலகுமாறு ஜிகாத் போராளிகள் முஸ்லீம் சமூக அமைப்புக்கள் என்று பெயர் குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம்; கேட்டபோது தன்னை 48 மணிநேரத்தில் பதவி விலகுமாறு முஸ்லீம் சமூக அமைப்புகள் என்ற பெயரில் எச்சரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்றதாகவும் இதன் காரணமாக தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் கடிதம் எச்சரிக்கை வடிவில் அமைந்துள்ளதாகவும் நகரசபை தலைவரை கடிதம் கிடைத்து 48 மணிநேரத்தில் பதவிவிலகவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இல்லையேல் 48 மணிநேர முடிவி;ல் தலைவரையோ அல்லது தலைவரின் குடும்ப உறுப்பினரையோ கொன்றுவிடப்போவதாகவும் சிறுபான்மை இனமான முஸ்லீம்கள் தொடர்ந்தும் இருக்க முடியாது என தெரிவித்து அக்கடிதம் பட்டைக்காடு வவுனியா என்னும் முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வவுனியா நகரசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் வவுனியா இணைப்பாளருமான அப்துல் பாரி கருத்து தெரிவிக்கையில நகரசபை தலைவரை எவரும் அச்சுறுத்தவே இல்லை எனவும் அவ்வாறு அச்சுறுத்தியிருந்தால் குழப்பம் விளைவிக்கும் சில சக்திகளின் செயலாக அது இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை நகரசபைக்கு சொந்தமான முஸ்லீம் மையவாடியில் நகரசபை அனுமதி பெறாது கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பில் நீதிமன்றத்தில் நகரசபையினரால் வழக்கு தொடரப்பட:டள்ளமை குறிப்பிடத்தக்கது.( by:-yasi)


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.