கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

கூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க!

Google I/O என்றால் என்ன? 

Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடம் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக Android 5.0 Key Lime Pie பதிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே இந்த ரகசிய விளையாட்டை வைத்துள்ளது. ரகசிய குறியீடு தெரிந்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும். 

https://developers.google.com/events/io/ என்ற முகவரிக்கு சென்றால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல I, O என்று இருக்கும். அது தான் குறியீடு. அதை க்ளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

உதாரணத்திற்கு IIOIIOII என்ற குறியீட்டை அழுத்தினால் ட்ரம்ஸ் வாசிக்கலாம்.



 மற்ற குறியீடுகள்:
  • Cat : IIIOOIII
  • Space: OOIOIOIO
  • Pong : IOOOOOOI
  • Bacon : IOOIOOOO
  • Simone : IIOIOOII
  • Eightbit : OIOIOOII
  • Synth : IOOOIOOO
  • ASCII : OIIIIIII
  • Bowling : OIIIOIOI
  • Rocket : OIOOOIOI
  • Burger : OOIIIOOI

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.