செட்டிகுளத்தில் 41 பேருக்கு தற்செயல் நிவாரண கொடுப்பனவு

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் தற்செயல் அனர்த்தங்களால் பாதிப்படைந்த 41 பேருக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளது என வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த ஆண்டு தற்செயல் அனர்த்தத்தால் பாதிப்படைந்தவர்களின் நிவாரணமாக வட மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் 36 பேருக்கு தலா 10,000 ரூபா வீதமும் நான்கு பேருக்கு தலா 9,000 ரூபா வீதமும் ஒருவருக்கு 8,000 ரூபாவும் நிதியுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்டையில் இந்த நிவாரணங்களுக்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் செட்டிகுளம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் செல்வி ரீ. நந்தினியை தொடர்பு கொண்டு உரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும்" என்றார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.