வவுனியா நகரசபையின் அசமந்தப் போக்கு;மக்களால் வீதிகள் புனரமைப்பு
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட காளிகோவில் பிரதான வீதியை நகரசபையால்புனரமைத்து வழங்கப்படாமையினால் குறித்த பிரதேச மக்களால் வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபை எல்லைக்குட்டபட்ட குருமன்காடு காளிகோவில் வீதியானது திருநாவற்குளம், புதுக்குளம், மரக்காரம்பளை, கிடாச்சூரி, தரணிக்குளம், கல்மடு உள்ளிட்ட பல கிராமங்களுக்கான பிரதான பஸ் போக்குவரத்து வீதியாகும்.
அத்துடன் குறித்த வீதியினூடாகவே பாடசாலை மாணவர்களும் தொழிலுக்கு செல்வோரும் அதிகளவிலானோர் பயணம் செய்வது வழமை. எனினும் வீதியில் குன்றும் குழியுமாக காணப்படுவதால் தினமும் சிறுசிறு விபத்துக்கள் இடம்பெறுவதுடன் போக்குவரத்து செய்வோர் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகுகின்றனர்.
இதனால் குறித்த வீதியை உடனடியாக புனரமைத்துத் தருமாறு வவுனியா நகரசபையிடம் பல தடவை தெரிவித்தபோதும் அவர்களின் அசமந்தப் போக்கினை அடுத்து குறித்த பகுதி மக்கள் வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நகரசபையினரை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த வீதியினை அமைப்பதற்கு ஏற்கனவே சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.