கட்டுமாண பணிகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வவுனியா பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்படைந்த பிரதேசங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான ரிசாட் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சென்ற பார்வையிட்டதுடன் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய கட்டுமாண பணிகள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடினார்.

வவுனியா, செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்படைந்த கிராமங்களான கந்தசாமிநகர், சிற்பிக்குளம், மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம், களுகுண்ணாமடு, அரவந்துலாவ ஆகிய கிராமங்களை பார்வையிட்ட அமைச்சர் இப்பகுதிகளில் எதிர்காலத்தில் மக்கள் பாதுகாப்பை தேடுவதற்கான வழிவகைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை செட்டிகுளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்த சிற்பிக்குளத்திற்கு, படகு ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு ஆவன செய்யுமாறும் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் இக்கிராம மக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு உலருணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் தெரிவித்த அமைச்சர், கந்தசாமி நகர் மக்களுக்கு வீடுகளின்; பாதுகாப்பு தொடர்பிலும் அக்கிராமத்திற்கு அண்மையில் உள்ள பாலம் தொடர்பிலும் கட்டுமாண பணியை முன்னெடுக்க ஆவன செய்யுமாறும் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.


PHOTOS FROM - TAMIL MIRROR




இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.