வவுனியாவில் காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்பு!
வவுனியா மரக்காரம்பளைக் குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 68 வயதுடைய பழனிச்சாமி அருணாச்சலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த இவர் 2ஆம் திகதி மரக்காரம்பளையில் இருந்து வவுனியா நகருக்கு சென்ற போதே காணாமல் போயிருந்ததாக வவுனியா பொலிஸில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவரது சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று முன்தினம் மரக்காரம்பளை குளத்தில் மீட்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட சடலம் திடீர் மரண விசாரணைகள் அதிகாரி சிவநாதன் கிஷோர் தலமையில் மேற்கொள்ளப்பட்டதுடன் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.