வவுனியா மாவட்டத்தில் களை நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது: விவசாய திணைக்களம்
வவுனியா மாவட்டத்தில் களை நெல்லின் தாக்கம் ஏற்பட்டுள்ளமையினால் விவசாயிகள் அது தொடர்பில் பூரண கவனம் செலுத்த வேண்டும் என விவசாய திணைக்களத்தின் விரிவாக்கற்பிரிவு பாடவிதான உத்தியோகத்தர் தர்மதேவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீடி ரைஸ் எனப்படுகின்ற களை நெல்லின் தாக்கம் இனம் காணப்பட்டுள்ளது. இது நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் தற்போது உள்ளது. இக்களையானது நெற்செய்கை செய்யப்படும் பிரதேசங்களில் காணப்படும். முதன் முதலாக 1970 ஆம் ஆண்டு இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் இந்த இனம் காணப்பட்டது.
இதற்கு பின்னர் இது ரஷ்யா, தென் அமெரிக்க பிராந்தியத்தில் காணப்பட்டுள்ளது. இக் களையானது நாம் செய்கை மெற்கொள்ளும் இனத்திற்கும் இயற்கையாகவே வரும் இனத்திற்கும் தானாக இடம்பெறும் கலப்பினால் உருவாகி வளரும் ஓர் புதிய இனமே இதுவாகும்.
இதனை விவசாயிகள் அடையாளம் காணுவது மிகவும் கடினமானது. ஏனெனில் நாம் பொதுவாக செய்கை பண்ணும் இனத்தோடு ஒத்து காணப்படும்.இப் பயிரில் இருந்து கதிர் வெளி வரும் வரைக்கும் ஒரே மாதிரியான குணவியல்பை கொண்டிருக்கும். எனவே கதிர்வந்த பின்னரே இனம் காணமுடியும்.
இது நாம் சாதாரணமாக பயிர் செய்யும் இனத்திற்கு முன்னராகவே கதிர்வந்து முதிர்ந்து விடும். இது சிவப்பு நிறமாக காணப்படும். இக் களை நெல்லினை நாம் கைகளினால் வெட்டியே அகற்ற வேண்டும். இக் களை காணப்படும் நெல்லினை விதை நெல்லாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இந்த இரண்டு முறையையும் நாம் பின் பற்றி வந்தால் எதிர்காலத்தில் இந்த களை நெல்லின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும்.
வவுனியா மாவட்டத்தை பொருத்தவரை கடந்த இரண்டு வருடங்களாகவே இனம் காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் விதை நெல்லினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதன் காரணமாகவே இத் தாக்கம் வவுனியா மாவட்டத்திற்கும் வந்துள்ளதாக நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.