நோயாளர்களின் நலன் கருதி வவுனியா மருத்துவ மனையில் விதிகள்
வவுனியா மருத்துவமனை வளாகத்தினுள் மருத்துவமனை நிர்வாகத்தினரால் பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கையடக்கத் தொலைபேசி பாவித்தல், மதுசாரம் பாவித்தல், வெற்றிலை, புகையிலை பாவித்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தினுள் வைத்து சிலர் மதுவை அருந்துவதால் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. வெற்றிலை பாவித்து விட்டுத் துப்புவதால் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் மருத்துவமனை விடுதிக்குள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதால் சக நோயாளிகளுக்கும், ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுவதால் இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனை, குப்பை கொட்டுதல் என்பவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள குப்பை கொட்டும் பெட்டிக்குள் கழிவுகளைப் போடுமாறும், வைத்தியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நோயாளிகள் உணவை விடுதிக்குள் வைத்து அருந்துமாறும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
வெற்றிலை பாவித்து விட்டுத் துப்புவதால் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.