இலங்கை பெற்றோல் விலையை முன்னறிவித்தலின்றி அதிகரித்துள்ளது!


இலங்கையில் பெற்றோலின் விலை நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாதாரண பெற்றோல் (ஒக்டெய்ன் 90)  லீற்றர் ஒன்றின் விலை 159 ரூபாவாக இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கொசி மாத்தாய், இலங்கை அரசாங்கம் பெற்றோலின் இறக்குமதி செலவை ஈடுசெய்ய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரின் ஆலோசனைப்படியே பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.