கேபிள் ரி.வி நிலையங்கள் இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவால் முற்றுகை!


வட கிழக்கெங்கும் கடந்த 12ம் திகதி தொடக்கம் இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு, கேபிள் ரி.வி வழங்குனர்களின் கட்டுப்பாட்டறையினை திடீரென முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான பெறுமதிமிக்க பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக வவுனியா, மன்னார் மாவட்ட கேபிள் ரி.வி வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் உச்சிதனை முகர்ந்தாலே திரைப்படம் இந்தியக் தொலைக்காட்சியான சன் ரி.வியில் ஒளிபரப்பட்டது. இலங்கையில் ஒளிபரப்பான இத்திரைப்படம் இடைநடுவே நிறுத்தப்பட்டு வேறு ஒருதிரைப்படம் ஒளிபரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வடகிழக்கில் இவ் அதிரடி முற்றுகையில் வவுனியா குருமண்காட்டில் சட்டவிரோதமாக இயங்கிய கேபிள் ரி.வி நிலையத்தை முற்றுகையிட்டு இரண்டு இலட்சத்திற்கு அதிகமான பொருட்களை கைப்பற்றியதுடன் கடந்த 14 ம் திகதி மன்னார் எழுத்தூரில் இயங்கிய சட்டவிரோத கேபிள் ரி.வி நிலையத்திலும் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அதே போன்று மட்டக்களப்பிலும் முற்றுகையிட்ட போதும் ஏற்கனவே தகவல் அறிந்த மட்டக்களப்பு சட்டவிரோத கேபிள் ரி.வி இயக்குனர்கள் பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றியதுடன் தற்போது கேபிள் ரி.வி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட கிழக்கில் இயங்கிய ஆஸ்க் கேபிள் ரி.வி வழங்குனர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரி.வி வழங்குனர்களையும் இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் சிறப்பு அதிகாரிகள் தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் உள்ள தகவல்களின் அடிப்படையில் கொழுப்பில் சிற்றி கேபிள் இயக்குனர்கள் கொழும்பு மாவட்டத்திலும் லங்கா கேபிணள் செட்டலைட் நெட் வேக் நிறுவனமும் திருகோணமலை மற்றும் மலையகத்திலும் கேபிள் ரி.வியினை இயக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லங்கா புரோட் பேண்ட் நெட்வேக் என்ற கேபில் ரி.வி இயக்குனர்களின் பெயர் கடந்த கிழமை இலங்கை தொலைத் தொடர்பு ஆனைக்குழுவின் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டதனைத் தொடர்ந்தே இச்சட்ட நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உச்சிதனை முகர்ந்தாலே திரைப்படம் (தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் தமிகத்தில் தயாரிக்கப்பட் திரைப்படமாகும்) ஒளிபரப்பபட்டதால் இச்சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது லங்கா புரோட் பேணட் நெட்வேக் (எல்.பி.என்) என்னும் நிறுவனத்தின் கேபிள் ரி.வி ஒளிபரப்புவதற்கான உரிமம் புதுப்பிக்கப்படாததால் சட்டநடவக்கை எடுக்கப்பட்டதாவென அறிய முடியாதுள்ளதாக வவுனியா, மன்னார் மாவட்ட கேபிள் ரி.வி வழங்குனர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.