மாபெரும் வடக்கு மாகாண கண்காட்சி
கண்காட்சியானது கடந்த காலங்களைப் போல் அன்றி இவ்வருடம் மிகவும் வினைத்திறனான முறையில் ஏழு பெரும் துறைகளான உணவு, சுகாதாரம், வீடமைப்பு உட்கட்டுமானம் போக்குவரத்து, கல்வி, மனித வளம், பொதுச்சேவை, சமூக நலன், கைத்தொழில் ஆகிய துறைகளை முன்னிறுத்தி நடத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாண கண்காட்சி 2012 இல் 11 ஆயிரத்து 400 சதுர அடி நிலப்பரப்பில் 7 பெரும் துறைகளை முன்னிறுத்தி வெகுசிறப்பான முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை யாழ். மாநகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 2009-2011 வருட காலத்தில் வடக்கு மாகாணத்தில் பெறப்பட்ட அடைவுகள் காட்சிப்படுத்தப்படும்.
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில் சுமார் 2 லட்சம் மக்கள் பங்கு கொள்ளக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி நேற்று உதய னுக்கு வழங்கினார்.
வடக்கு மாகாண கண்காட்சி 2012 தொடர்பாக பிரதம செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாண கண்காட்சியானது கடந்த காலங்களைப் போல் அன்றி இவ்வருடம் மிகவும் வினைத்திறனான முறையில் ஏழு பெரும் துறைகளான உணவு, சுகாதாரம், வீடமைப்பு உட்கட்டுமானம், போக்குவரத்து, கல்வி, மனிதவளம், பொதுச்சேவை, சமூகநலன், கைத்தொழில் ஆகிய துறைகளை முன்னிறுத்தி நடத்தப்படவுள்ளது.
அத்துடன் ஏழு பிரதானதுறைகளும் பல்வேறு வகைகளாக வகையீடு செய்யப்பட்டு அவை காட்சிப்படுத்தப்படவுள்ளன. வடக்கு மாகாண ஆளுநரின் மாநாட்டை முன்னிறுத்தி இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேசமயம் "ஒன்றிணைந்த முன்னேற்றம் நோக்கி'' எனும் தலைப்பிலும் மூன்று நாள்கள் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும்.
இவை யாவும் உள்ளூராட்சி துறைகளை மையப்படுத்தியதான அபிவிருத்தி தேடலாக இருக்கும். இதில்

* இலங்கையின் உள்ளூராட்சியில் நல்லாட்சித் தத்துவங்கள்.
* உள்ளூராட்சி கட்டமைப்பில் அதிகாரங்களும் கடமைகளும்.
* உள்ளூராட்சி சபைகளின் சிறந்த செயலாற்றுகைகள்.
* உள்ளூராட்சியில் ஒருங்கிணைந்த குடிமக்கள் பட்டயம் உள்ளிட்ட 14 துறைகளின் அமர்வுகள் பிரத்தியேகமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
வடமாகாணமான முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மற்றும் தென்பகுதி மக்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக வடமாகாண அரச திணைக்களங்கள் யாவும் முழு உத்வேகத்துடன் தமது சிறந்த செயலாற்றுகையை வெளிப்படுத்தி பிரதேச அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் 34 உள்ளூராட்சி சபைகளும் 34 சிறந்த தலைப்புக்களில் தமது செயலாற்றுகையை வெளிப்படுத்தவுள்ளன என்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ரமேஷ் விஜயலட்சுமி கூறினார்.