அவுஸ்திரேலியா செல்ல தயாரான போது 47 பேர் கடற்படையினரிடம் மாட்டிக்கொண்டனர்


சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 47 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் ´தமரா´, ´காலிங்க´  என்ற இரண்டு மீன்பிடி படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல தயாரான வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான  47 பேர்களில் 3 பெண்களும் 5 சிறுவர்களும் அடங்கலாக 33 தமிழர்களும் 9 சிங்களவர்களும் 5 முஸ்லிம்களும் இருந்தனர்.
கைது செய்யப்பட்டோர் யாழ்ப்பாணம், வவுனியா, நீர்கொழும்பு, முல்லைத்தீவு, புத்தளம், கிளிநொச்சி, வத்தளை, சிலாபம், மட்டக்களப்பு, கற்பிட்டி, மாவனெல்ல, மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கென குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.