வவுனியாவில் கண்ணி வெடி அகற்றும் நிறுவனமொன்றின் மீது அதன் ஊழியர்கள் கல்வீச்சுத் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மீது அதன் ஊழியர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.இத்தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதுடன் குறித்த அலுவலகமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகள் சபையின் நிதி உதவியின் கீழ் இயங்கும் குறித்த அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இதைக் கேட்கச் சென்ற இவர்கள் மீது, அலுவலக ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்தே தாங்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக, தாக்குதல் நடத்திய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, நிதி பற்றாக்குறை காரணமாகவே சம்பளம் வழங்க முடியாது போனதாகவும் மிக விரைவில் உரி யசம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த அலுவலகத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.                                                                                                                              ஊழியர்கள் நடாத்திய கல்வீச்சுத் தாக்குதலில் குறித்த அலுவலகம் சேதமடைந்துள்ளது என வவுனியா பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By:-s.s.yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.