31 பேரின் அவுஸ்திரேலியா கனவு வவுனியா பொலிஸாரால் கலைந்தது!
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்வதற்காக முயற்சித்த 31பேரை வவுனியாவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இவர்கள் பயணித்த பஸ்ஸை சோதனையிட்ட போதே அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், சிலாவத்துறை பிரதேசத்துக்குச் சென்று அங்கிருந்து படகு மூலம் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் கைக்குழந்தையொன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.