வீதி அனுமதிப்பத்திரமற்ற 185 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
வீதி அனுமதிப்பத்திரமற்ற 185 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயர் பொலிஸ் அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள், அரசில்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்கோருக்கு சொந்தமான பேருந்துகளே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தூரப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையில் இந்த பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் நிஹால் தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சிற்கும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே மூன்று தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொத்துவில், மூதூர் மற்றும் மன்னார் போன்ற நகரங்களுக்கான போக்குவரத்து சேவையில் இந்த பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுமதிப்பத்திரமின்றி சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்.