நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

பிரதான அனல் மின்னுற்பத்தி நிலையங்களான புத்தளம் நுரைச்சோலை மற்றும்  கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறுகள்  காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று தொடக்கம்  மின்சார விநியோகத்தடை  அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான அனல் மின்னுற்பத்தி நிலையங்களான புத்தளம் நுரைச்சோலை மற்றும் கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறுகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று தொடக்கம் மின்சார விநியோகத்தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரம் உள்ளிட்ட 45 பிரதேசங்களுக்கு எதிர்வரும் 28 ம் திகதி வரை சுழற்சி முறையில் மின்சார விநியோகம் தடைபடும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விமலதர்ம அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். 

இதன்படி எதிர்வரும் காலங்களில் நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்கள் வரை மின்சார விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவித்துள்ளார். பகல் நேரங்களில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கும், இரவு நேரங்களில் 45 நிமிடங்களும் இ;வ்வாறு மின்சார தடை அமுல்படுத்தப்படும். 

குறித்த தொழிநுட்ப கோளாறுகளை சீர்செய்வதற்கு எதிர்வரும் 5 நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் தெரிவித்துள்ளனர். 

காலை 8.30 தொடக்கம் 10.45 வரையிலும், 10.45 முதல் 01 மணிவரையிலும், 01 தொடக்கம் 3.15 வரையிலும் 3.15 தொடக்கம் 5.30 வரையிலும், பின்பு மாலை 6.30 தொடக்கம் 9.30 வரையிலும் இவ்வாறு மின்சார தடை அமுல்படுத்தப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

சிறி ஜயவர்த்தனபுர கோட்டே, தெஹிவளை, ரத்மலானை, பன்னிபிட்டிய, அத்துருகிரிய, பாணந்துறை, அநுராதபுரம், ஹபரன, வவுனியா, மாதம்பை, அம்பாறை, புத்தளம், குருநாகலை உள்ளிட்ட பிரதேசங்களில் இன்றைய தினம் காலை 8.30 தொடக்கம் 10.45 வரை மின்சார விநியோகம் தடைபடும்.

அதேவேளை, திருக்கோணமலை, பியகம, கட்டுநாயக்க, நுவரஎலிய, கொஸ்கம, களனி, ஆனியாகந்த, வேயங்கொட, சீத்தாவக்க, எம்பிலிபிட்டிய, பதுளை, ரன்தெம்பே, அம்பலன்கொட, தெனியாய, காலி, மாத்தறை, மத்துகம, ஹொரன, வாழைச்சேனை, சப்புகஸ்கந்த, விமலசுரேந்திர, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மின்சாரம் தடைபடும்.

இதுதவிர கொழும்பு மாநகரம், அதனை அண்டிய காலிமுகத்திடல், ஜனாதிபதி வீதி, பொரள்ளை, கிரான்பாஸ், ஹோர்டன் பிளேஸ், கொட்டா வீதி, நகரமண்டபம், டேம்வீதி, சுகததாச மற்றும் பிரேமதாச விளையாட்டரங்கு பிரதேசம், உள்ளிட்ட பகுதிகளிலும் காலை நேரத்தில் மின்சார விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முற்பகல் 10.45 தொடக்கம் 1 மணிவரை கிருலப்பனை, எம்பயர் சிட்டி, பம்பலபிட்டிய மாடி வீட்டுத் திட்டம், ஹெவ்லொக் வீதி, மயுரா இடம், மாளிகாவத்தை, சங்கராஜ வீதி, புனித ஜோன் வீதி, மெசேன்ஜர் வீதி மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பிற்பகல் 1 மணி தொடக்கம் 3.15 வரையான காலப்பகுதியில், கொழும்பு யோக் வீதி, முதலாம், இரண்டாம் குறுக்கு வீதிகள், சேர் பாரோன் ஜயதிலக்க வீதி, செத்தம் வீதி, காலி முகத்திடலின் ஒரு பகுதி, யுனியன் பிளேஸ், லிபர்டி பிளாஸா, கொள்ளுப்பிட்டி, மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களிலும்,

மேலும், அல்பிட்டிகல மாவத்தை, ஆனந்தகுமாரசுவாமி வீதி, டெக்னிகல் சந்தி தெமட்டகொட, புஞ்சி பொரள்ளை, பேஸ்லயின் வீதி, துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலும், மின்சார விநியோகம் தடைபடும்.

இதுதவிர, மாலை 3.15 முதல் 5.30 வரை கிரஸ்கட் வீட்டுத்திட்டம், ஹெவ்லொக் வீடமைப்பு திட்டம் வனாத்தமுல்ல, வெள்ளவத்தை, கேம்பிரிஜ் பிளேஸ், பௌத்தாலோக்க மாவத்தை, மெனிங் வர்த்தக சந்தைப் பகுதி, புறக்கோட்டையின் சில பகுதிகள், கொட்டாஞ்சேனை, ஒல்கட் வீதி, அல்விஸ் வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும்,

மாலை 6.30 மணிமுதல் 7.15 மணிவரையும், 7.15 முதல் 8.00 மணிவரையிலும், 8.45 மணிதொடக்கம் 9.30 வரையிலும், குறித்த பகுதிகளில் அதேவரிசையில் மின்சார விநியோகம் தடைபடும் எனவும் அறிவிக்கப்டுள்ளது.

மின்சார விநியோக தடை தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மின்சார சபையின் பொறியியல் காரியாலயத்திற்கு 1987 என்ற தொலைபேசி இலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

BY:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.