கல்வியில் சாதனை படைத்து எமது இனத்தின் இருப்பை காப்பாற்றுங்கள்

இந்த ஆண்டுப் பரீட்சைக்கு தோற்றும் உயர்தர மணவர்களாகிய நீங்களும் உயர்ந்த பேறுபேற்றைப் பெற்று எமது தாயகத்தின் எமது இனத்தின் இருப்பை காப்பாற்றுங்கள் என வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். தமிழினம் கொடூரமான போரினால் பாதிக்கப்பட்டு தமது சொத்துக்கள் யாவற்றையும் இழந்தது. ஆயினும் கல்வி என்ற சொத்தை எமது இனம் இழக்கவில்லை. கல்வியே எங்கள் இனத்தின் மூலதனம்.                                                                                                       வவுனியா தெற்கு வலையத்திற்கு உட்ப்பட்ட இவ் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் உயர்தரபரீட்சைக்கு தோற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கான கருத்தரங்கினை வவுனியா நகரசபையும், தெற்கு கல்விவலயமும் இணைந்து மேற்கொண்டது இதற்கு கிரமாம் முதல் நகரம் வரை கால் பதித்திருக்கும் கணனி உலகில் வழிகாட்டி நிறுவனமாகிய ரெக்னோவேல்ட் நிறுவனம் அனுசரணை வழங்கியது. இக்கருத்தரங்கு இன்றைய தினம் நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதைனை தெரிவித்தார்.

இன்றைய மாணவர்கள் தான் நாளைய நாட்டின் தலைவர்கள் இன்று மாணவர்களாகிய நீங்கள் என்ன அடிப்படையில் வாழுகின்றீர்களோ அதே அடிப்படையில் தான் எதிரிகாலத்தில் திகழுவீர்கள். மாணவர்கள் மத்தியில் நாம் அரசியலை திணிக்க விரும்பவில்லை. ஆயினும் சில விடயங்களில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் எமது இனத்தின் கல்வி சார்ந்த நிலைப்பாடுகள் பாதித்தன. பல பேராசியர்கள், கல்விமான்கள, பீடாதிபதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், என பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயினர். பல பாடசாலை நீர்மூலமாக்கப்பட்டன. ஆயினும் கல்வியில் நாம் யாருக்கும் சோடை போனவர்கள் அல்ல என்பதை எமது மாணவர்கள் பெறுபேறுகள் மூலம் நிரூபித்த வண்ணம் உள்ளனர்.இன்று எங்கள் தேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவ சமூகத்திற்கு புலம்பெயர்ந்த உறவுகள் தங்களாளான முழுப்பங்களிப்பை செய்து வருகின்றனர். குறிப்பாக அன்புத்துளிர் என்ற அமைப்பு கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்ட மாணவருக்கு உதவிகள் மேற்கொண்டனர்.

இந்த அமைப்பின் உதவி வெகுவிரைவில் வவுனியா மாவட்ட மாணவருக்கு கிடைக்க இருக்கின்றமை விசேட அம்சமாகும். இவ் அன்புத்துளிர் அமைப்பனால் எமக்கு வழங்கப்பட இருக்கும் நிதியினை கல்வி சார்ந்த மாணவ சமூகத்திற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.நீங்களும் பரீட்சைக்கு தோற்றி பல்கலைகழகம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இவ்வாறான அமைப்பின் உதவி புலமைப்பரிசில் என்ற அடிப்படையில் கிடைக்கும் என நம்புகின்றேன். அதற்காக சிறந்த உயர்வாக கற்று சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.