சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் விடுதிகள் காணப்படுகின்றது. அதில் கீழ் விடுதியில் சுமார் 30 அரசியல் கைதிகள் உள்ளனர். மேல் விடுதியில் ஏனைய கைதிகள் 190 பேர் உள்ளனர். மேல் விடுதியில் கைதிகள் உறங்குவதற்கான படுக்கை வசதிகள் உள்ளது.
புதிதாக வரும் கைதிகளிடம், கீழ் விடுதியில் உள்ள கைதிகள் சிலர் குழுவாக இணைந்து அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்ற பின் மேலே செல்ல அனுமதிக்கின்றனர்.
கீழ் விடுதியில் உள்ள கைதிகளில் மன்னார், நொச்சிக்குளம், சாவகச்சேரி, மன்னார் பரயநாளன் குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் தலைமை தாங்கி குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் மன்னாரைச் சேர்ந்த 7 பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் போது 3 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு சிறைக்காவலர்களும் உடந்தையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
By:-yasikanth