வடக்கில் 7,91,620 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் இன்னமும் 124 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணி வெடியகற்றப்பட வேண்டியுள்ளது.
மேலும் வடக்கில் மொத்தமாக 1418 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில். 1314 சதுர கிலோ மீற்றர் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இதேபோல் யுத்தகாலத்தில் அதிகளவு (219,940) கண்ணிவெடிகள் யாழ்.மாவட்டத்திலேயே புதைக்கப்பட்டுள்ளன. அடுத்த படிகளில் கிளிநொச்சி (214, 240), வவுனியா (118, 054), முல்லைத்தீவு( 104, 351), மன்னார் (103, 265) என்ற அளவில் உள்ளது.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள். மூன்று மாகாணங்களில் 5000சதுர கிலோமீற்றர் பகுதியில் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 2061சதுர கிலோமீற்றர் பகுதியிலேயே கண்ணிவெடிகள் இருப்பது தொழில் நுட்ப ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.
By:-yasikanth