யாழ்.மாவட்டத்தில், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய சுமார் 10 ஆயிரம் பேர் இடைத்தங்கல் முகாம்களில்...!
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றிற்க்கு அவர் வழங்கியுள்ள செய்தியில், சுமார் 80 ஆயிரம் பேர் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட் போதும், 10 ஆயிரம் பேர் தொடர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இதேவேளை இவ்வாறு மக்கள் வாழ்ந்துவரும் இடைத்தங்கல் முகாம்களில் அடிப்படை வசதிகள் சிறப்பாக இல்லாத நிலையில் ஒரு பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து மகாம்களில் இருந்து வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலுமொரு தொகுதியினர், தொண்டுநிறுவனங்களின், மற்றும் அரசின் உதவியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் எதிர்பார்த்ததை விடவும், குறைவான வேகத்திலேயே வெடிபொருட்களை அகற்றும் பணி இடம்பெற்று வருகின்றது.
இதனால் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பணிகளும் தாமதமடைமந்து வருகின்றன. எனினும் இந்த மக்களை இந்த வருட இறுதிப் பகுதிக்குள் அவர்களது இடங்களில் மீள் குடியேற்றம் செய்ய முடியும் எனத் தான் நம்புவதாகவும் அரச அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். என நம்புகின்றோம்.
மேலும் உள்ளக இடப்பெர்வுக்குள்ளான 2 இலட்சத்து 75 ஆயிரத்து 693 பேரில் தற்போது 6 ஆயிரத்து 22 பேர் மட்டுமே வவுனியாவில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரபூர்வ உத்தியோகபூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இவர்களில் 3 ஆயிரத்து 922 பேருக்கு நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்றுவரக்கூடிவாறு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 5 ஆயிரத்து 444 பேர் இந்தப் புள்ளிவிபரங்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
By:-yasikanth