க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முதல் இடத்தில்
அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளது.
பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் ஆகிய கற்கை நெறிகளில் 'சுப்பர் மெரிட்' (அதி விசேட திறமை) சித்தி பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எம். எஸ். பத்மநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌதிக விஞ்ஞான பிரிவில் சிவகுமாரன் கௌதமனும் உயிரியல் விஞ்ஞான பரிவில் கலியுகவரதன் லபோசனும், வர்த்தக பிரிவில் கிருஸானந்தராசா கஜந்தனும் மூன்று பாடங்கிலும் 'ஏ' சித்திகளை பெற்றுள்ளதுடன் அதி விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் வர்த்தக பிரிவில் சிவகுமார் மாசிலன், கருணாநிதி பிரசாந்தன் ஆகியோர் மூன்று பாடங்களில் 'ஏ' சித்தி பெற்று அதி விசேட சித்தி பெற்றுள்ளனர்.
பௌதிக விஞ்ஞான பிரிவில் பரந்தாமன் ரஜீவ்கரன் 3ஏ, கைலைநாதன் கரிகரன் 2ஏ, பி, இளந்தளையசிங்கம் சுவேதன் 2ஏ, பி, ஆகியோர் 'மெரிட்' (திறமை) சித்திகளைகளையும் சுப்பிரமணிய சர்மா மணிவண்ணன் 2ஏ, பி, யோசப் அறிவழகன் 2ஏ, பி, பாஸ்கரன் கோகுல்ராஜ் 2ஏ, சி, யேசுராஜ் புவிராஜ் 3பி, பாலசாமி சுந்தரேஸ்வரன் ஏ, 2சி, பெறுபேறுகளையும் பெற்று பொறியியல் பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
உயிரியல் விஞ்ஞான பரிவில் யோகநாதன் ஜனகன் 2ஏ, பி, துரைசிங்கம் பவநீதன் 2ஏ, பி, செல்வி நிதர்சினி பாலசிங்கம் ஏ, 2பி, பெறுபேறுகளையும் பெற்று மருத்துவ பீடத்திற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இத்துடன் வர்த்தக பிரிவில் சற்குணராசா யதுர்சன் ஏ, 2பி, கணேசானந்தன் சஜீத் ஏ, பி, சி, சிவகுலசிங்கம் கோபிநாத் ஏ, 2சி, பிரான்சிஸ் சேவியர் எட்வின் தயாளன் 2பி, சி, கணேஸ் கபில்ராஜ் ஏ, பி, சி, நவரத்தினம் நியூட்டன் நேசகுமார் ஏ, 2சி, ஜெயராசா ஜெரோன் துரைராசா சரத்குமார், சிற்சபேசக்குருக்கள் குககணநாதன், தேவமுரளி தேவதர்சன், பாக்கியநாதன் மதுசன் முதலானோர் வர்த்தக பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
கலை பிரிவில் நடனசபாபதி அனீஸ் 3ஏ, பரமேஸ்வரன் அச்சுதன் 2ஏ, பி, கதிரேசன் கிருஸானந்தன் ஏ, 2பி, செல்விகள் பேபி சர்மிலா ஐயப்பன் 2பி, சி, நிசாந்தினி ராசகுமார் 2பி, சி பெறுபேறுகளை பெற்று கலை பீடத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டு பரீட்சை எழுதியோரில் 105 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.
By:-yasi