வவுனியா மண் பற்றிய பாடல்

வவுனியா மண்ணே எங்களின் கண்ணே

வந்தவரை வாழவைக்கும் வன்னிதாயவளே

பண்டார வன்னியன் வாழ்ந்த பூமி இது

பண்பாடு கொண்ட தமிழர் வணங்கும் சாமி

கண்ணான கலைகள் நல்ல தமிழ் கதைகள்

பொன்னான தேசம் எங்கும் பூமழை பொழிந்திட

மணிக்கூட்டு கோபுரமது உங்களை வரவேற்கும்

பஸ்டாண்டு வீதியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்

கந்தசாமி ஆலையமோ கைகூப்பி தொழவைக்கும்

கந்தசஸ்டி வந்ததுமே சூரன் போரும் வலம் வரும்

வசந்தி தியேட்டர்ல மக்கள் கூட்டம் அலை மோதும்

இளையதளபதியின் புதுப்படம் ரிலீஸ் ஆகும்

நகரசபை மைதானம் மின்னொளியில் களைகட்டும்

மாபெரும் நிகழ்சிகளும் அங்குதானே அரங்கேறும்

வான வேடிக்கைகள் வானம் எங்கும் அதிர்ந்திட

வைரவ புளியங்குளம் உனை அழைக்கும்

குளக்கட்டு பிள்ளையாரின் அருள் கிடைக்கும்

குருமன்காட்டு சந்திஎங்கும் பசங்க கூட்டமடா

கும்மாளம் அடிகின்ற வாலிபர் வட்டமடா

கொம்பியுட்டர் படிக்கபோகும் பெண்களின் பின்னால

காதல் வலை வீசுகின்ற மன்மத கூட்டமடா

பண்டாரிக்குளம் வவுனியா அழகை சொல்லும்

வயல்வெளி அம்மன் கோவில் நிறைவு தரும்

பண்பான தமிழர்கள் வாழுமிடம் இது

பண்பாடு நிறைந்த தமிழ் பேசுமிடம்

அந்தி மாலை வெளியிலே கிரிக்கட்டு விளையாட்டு

சந்திஎங்கும் வீதிஉலா வண்ண வண்ண கோலமடா

உக்குளாம் குளம் எங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்

சின்ன சின்ன காதலடா சின்னவர்கள் வேலையடா

முறுக்கு மீசை வச்ச சிங்கங்கள் குமாங்குளம் வாழும் தங்கங்கள்

பண்போடு வாழும் எங்கள் தமிழரடா

இது வந்தவரை வாழவைக்கும் பூமியடா

மாசிமாதம் சிவராத்திரி வந்துவிட்டால்

மாறிமாறி பக்தர் கூட்டம் படையெடுக்கும்

கோவில் குளம் சிவன்கோவில் தான் உரைக்கும்

கண்ணன் கோவில் கோவில்குள புகழை சேர்க்கும்

கேல்மெட்டு போடாத மோட்டர் சைக்கிள் பசங்களும்

சவுண்டு வச்சு பாட்டு போடும் ஆட்டோக்களும் அதிகமடா

வாகன நெரிசல் புகை தாங்கலையே எங்கள்

இழுப்பயடி சந்தி இன்னும் துங்கலியே

எட்டுத்திக்கும் எங்கள் புகழ் பாடுங்கடா

கொட்டுமேளம் கொட்டி நீங்கள் ஆடுங்கடா

சுற்றிவரும் பூமியை சுற்றிவருவோம்

எங்கள் ஒற்றுமையை உலகிற்கு ஓங்கி உரைப்போம்

இப்படியாக பாடல் வரிகள் தொடர்ந்து செல்கின்றன ..இந்த பாடல்தான் கந்தப்பு ஜெயந்தன் முதன்முதலாக உருவாக்கிவரும்RAP பாடல்

பாடலை எழுதி இருப்பவர் பிரதாபன் ...மிக விரைவில் யாழ்தேவி இசை தொகுப்பில் வவுனியா மண்ணின் புகழ்பாடும் இந்த பாடல்


பாடல் ‍ கந்தப்பு ஜெயந்தன்


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.