யாழ்.குடாநாட்டில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனை! படையினர் திட்டமிட்டு பரப்புவதாக தகவல்

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட மாணவன், போதைப்பொருள் கும்பலுடனான தொடர்புகளை வவுனியா இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களிலேயே பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவன் யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார், இதற்கு முன்னர் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் உறவினருடன் வாழ்ந்துள்ளார்,

பின்னர் 2009 காலப்பகுதியில் எற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, வவுனியா நலன்புரி முகாமில் வாழ்ந்திருந்தபோது. கைத்தொலைபேசி வியாபாரத்தில் ஏற்பட்ட தொடர்பு பின்னர் போதைப்பொருள் வர்த்தகர்களுடனும் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் கூட கைத்தொலைபேசிக்குள் வைத்து போதைப்பொருளை கொண்டு வந்திருந்தபோது உறவினர்கள் பிடித்துள்ளனர். எனினும் எச்சரித்து விட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டார்,

எனவே குடாநாட்டிலும், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளிலும், போதைப்பொருள் பாவனை அதிகரித்தமைக்கு அரசாங்கத்தின் உதவியே காரணம்,

இராணுவத்தினரும், பொலிஸாரும், புலனாய்வாளர்களும், நன்கு திட்டமிட்ட வகையில், விபச்சாரம், போதைப்பொருள் பாவனை போன்ற பழக்க வழக்கங்களை மாணவர்கள் மத்தியில் பரப்பியிருந்தமை நிருபணம் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.