கொழும்பு – வவுனியாவுக்கான புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பம்
வவுனியாவில் இருந்து கொழும்புக்கு இன்று முதல் புதிய கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு அநுரதபுரத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு அநுரதப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில், நாளைமுதல் கொழும்பில் இருந்து நாளாந்தம் வவுனியாவுக்கான சேவையை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை 6.50க்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த கடுகதி ரயில், முற்பகல் 10.02க்கு அநுரதப்புரத்தில் தரித்து நிற்கும்.
முற்பகல் 10.50க்கு அது வவுனியாவை சென்றடையும்.
பின்னர் இந்த ரயில் பிற்பகல் 3.10க்கு வவுனியாவில் இருந்து புறப்பட்டு இரவு 8.15க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.
பொல்கஹாவெல, குருநாகல், கல்கமுவ, அநுரதபுரம், மதவாச்சி மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் மாத்திரம் இது தரித்து நிற்கும்.