வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம்! கிராமத்திற்கு சிங்கள பெயர்!-சிவசக்தி ஆனந்தன்

மேலும் தெரிவித்துள்ளார்
தமிழர்களுடைய பூர்வீக வாழ்விடமான வன்னிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றத்தின் அடுத்த கட்டமாக வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெடுங்கேணி கொக்கச்சான்குளத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அந்த இடத்திற்குச் சிங்களப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு அறிவிக்கப்படாமலேயே இக் குடியேற்றம் இடம்பெறுவதாகவும் இது குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ள போதிலும், அரச தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்துக்களும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளில் இந்த விடயம் பற்றி பேசப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்குப் பகுதிகளில் பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்க் குடும்பங்களின் பெருமளவு காணிகள் இராணுவப் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளமை மற்றும், அவ்வாறான தேவைக்காக மேலும் காணிகள் கோரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ( by:-yasi)

இது தொடர்பான விபரங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் அரசாங்கத்துடனான அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அரசாங்கத்தின் நேரடி கவனத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் 


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.